புதுக்கோட்டை மக்களவை தொகுதியில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர் இளங்கோவை ஆதரித்து அக்கட்சியின் பொருளாளர் பிரமேலதா விஜயகாந்த் பொதுமக்களிடையே வாக்கு சேகரித்தார். மக்களவை தேர்தலில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர்கள் தீவிரமாக வாக்கு சேகரித்து வருகின்றனர். அந்த வகையில் தற்போது அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா மக்களவை தொகுதி வேட்பாளர் இளங்கோவை ஆதரித்து பொதுமக்களிடையே வாக்கு சேகரித்தார்.
அப்போது பேசிய அவர், மக்களுக்கு செயல்படுத்தப்படும் நலத்திட்டங்களை தடுத்து கொண்டிருப்பவர் ஸ்டாலின் என்றும், எப்போதும் அரசை குறை சொல்லி கொண்டிருப்பவர் என்றும் தெரிவித்தார். மேலும் சாதிக் பாட்ஷா கொலைக்கு யார் காரணம் என்று சொல்ல ஸ்டாலினால் முடியுமா என கேட்டுகொண்டார்.