டான்செட் தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

முதுநிலை பொறியியல் படிப்புகளுக்கான டான்செட் நுழைவுத் தேர்வுக்கு இன்று முதல் 25 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

முதுநிலை பொறியியல் படிப்பில் சேருவதற்கு ஒவ்வொரு ஆண்டும் டான்செட் நுழைவுத்தேர்வு நடத்தப்பட்டு வந்தது. மாநிலம் முழுவதும் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்துக்கு உட்பட கல்லூரிகளில் சேருவதற்கு இந்த தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். இதனை அண்ணா பல்கலைக்கழகம் நடத்தி வந்தது. ஆனால், இந்த வருடம் அண்ணா பல்கலைக்கழகத்தில் பயிற்றுவிக்கப்படும் படிப்புகளுக்கு மட்டும் AUCET தேர்வு நடைபெறும் என்று புதிய கொள்கை முறை கொண்டு வரப்பட்டதால் மாணவர்கள் குழப்பமான மனநிலையுடன் இருந்தனர். இந்தநிலையில் அதனை ரத்து செய்து ஒரே தேர்வு நடத்தப்படும் என அண்ணா பல்கலைகழகம் அறிவித்துள்ளது.

இந்த தேர்வுக்கான விண்ணப்பங்களை https://www.annauniv.edu என்ற இணையதளம் மூலம் இன்று முதல் பதிவிறக்கம் செய்து 25 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். M.C.A படிப்புக்கு அடுத்த மாதம் 22-ம் தேதி காலை 10 மணிக்கும் M.B.A படிப்புக்கு 22-ம் தேதி பிற்பகல் 2.30 மணிக்கும் M.E,M.Tech,M.Arch,M.Plan படிப்புக்கு அடுத்த மாதம் 23-ம் தேதி காலை 10 மணிக்கு தேர்வுகள் நடைபெற உள்ளது.

Exit mobile version