சென்னையில் 10ம் தேதி போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம்

சென்னையில் நாளை மறுதினம் நடைபெறும் போலியோ சொட்டு மருந்து முகாமில் 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு மருந்துகளை வழங்கி பயனடையுமாறு பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார். சென்னையில் வரும் 10ம் தேதி போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறவுள்ளது. 5 வயதிற்குட்பட்ட சுமார் ஏழு லட்சத்துக்கு 13 ஆயிரம் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்குவதற்காக ஆயிரத்து அறுநூற்றி 44 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

அரசுத்துறை பணியாளர்கள், ரோட்டரி சங்க உறுப்பினர்கள், அங்கன்வாடி அலுவலர்கள், மாநகராட்சி பணியாளர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள் என பலரும் சொட்டு மருந்து வழங்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும் இந்த முகாமில் பொதுமக்கள் கட்டாயம் கலந்துகொண்டு 5 வயதிற்குட்பட்ட தங்களின் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கி பயன் பெற வேண்டும் என்று பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் ஜி.பிரகாஷ் கேட்டுக்கொண்டுள்ளார்.

Exit mobile version