இலங்கை அதிபர் தேர்தலுக்கான பிரச்சாரம் ஓய்ந்தது – 16 ஆம் தேதி வாக்குப்பதிவு

இலங்கை அதிபர் சிறிசேனாவின் பதவிக்காலம் முடிவடைய இருப்பதால், வரும் 16-ம் தேதி அதிபர் தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் ஒரு கோடியே 50 லட்சம் பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். அதிபர் தேர்தலில் சுமார் 35 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இதில் ஆளும் ஐக்கிய தேசிய கட்சி வேட்பாளராக சஜித் பிரேமதாசாவும், எதிர்க்கட்சி வேட்பாளராக இலங்கை பொதுஜன பெரமுனா சார்பில் முன்னாள் அதிபர் ராஜபக்சேவின் சகோதரர் கோத்தபய ராஜபக்சேவும் போட்டியிடுகின்றனர்.

இந்நிலையில் அதிபர் தேர்தலுக்கான அனல் பறக்கும் பிரசாரம் நேற்றுடன் நிறைவடைந்தது. தேர்தல் முடியும் வரை பல்வேறு முக்கிய இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

Exit mobile version