போலீஸ், தீயணைப்பு, ஆம்புலன்ஸ் உள்ளிட்ட அனைத்து அவசர உதவிக்கும் அழைக்க 112 என்ற எண், வரும் 19 ஆம் தேதி முதல் அமலுக்கு வர உள்ளது.
தற்போது அவசர போலீஸ் உதவிக்கு 100, தீயணைப்பு-மீட்பு பணிக்கு 101, பெண்கள் பாதுகாப்புக்கு 1090, ஆம்புலன்ஸ் 108 என தனித்தனியாக அவசர உதவி எண்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், இவை அனைத்தையும் ஒருங்கிணைத்து 112 என்ற ஒரே உதவி எண் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இந்த திட்டம், இமாச்சலப்பிரதேசம், நாகலாந்து மாநிலங்களில் ஏற்கனவே அமலில் உள்ள நிலையில், தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, தெலுங்கானா உள்ளிட்ட 14 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் வரும் 19 ஆம் தேதி முதல் அமலுக்கு வர உள்ளது.