திருமுல்லைவாயல் பகுதியில் எக்சைடு இன்சூரன்ஸ் என்ற பெயரில் 14 பேர் கொண்ட கும்பல் லோன் தருவதாக கூறி, பத்து லட்சம் ரூபாய் லோன் வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாகவும், அதற்கு, முதலில் 50 ஆயிரம் செலுத்த வேண்டும் எனவும் மோசடியில் ஈடுபட்டுள்ளனர்.
இது தொடர்பாக கோவை கிணத்துக்கடவைச் சேர்ந்த செல்வராஜ் என்பவர் அளித்த புகாரின் பேரில், திருமுல்லைவாயலில் உள்ள நிறுவனத்தின் உரிமையாளர் கோபி கிருஷ்ணா, வளர்மதி உள்ளிட்ட14 பேரை கைது செய்தனர் மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து, 20 செல்போன்கள், போலி சிம்கார்டுகள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டு விசாரணை செய்து வருகின்றனர்.