தனியார் பல்கலைக் கழகத்தின் மாடியிலிருந்து குதித்து மாணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டு அடுத்த காட்டான்குளத்தூரில் இயங்கி வரும் தனியார் பல்கலை கழக வளாகத்தில் ராகவ் என்கிற மாணவர் தற்கொலை செய்து கொண்டார். பி.டெக் பிரிவில் இறுதியாண்டு படித்து வரும் ராகவ் தொழில்நுட்ப பிரிவு கட்டிடத்தின் 15 ஆவது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்து வந்த மறைமலை நகர் காவல்துறையினர் ராகவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மாணவரின் தற்கொலை குறித்து வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த ஒரு மாதத்திற்குள் இந்த பல்கலை கழக வளாகத்தில் நடந்த மூன்றாவது தற்கொலை இது என்பது குறிப்பிடத்தக்கது.