கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி உதகையில் உள்ள தனியார் விடுதியில் கிறிஸ்துமஸ் கேக் கலவை தயாரிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில், சுமார் 60 கிலோ முந்திரி, உலர் திராட்சை, அத்திப்பழம், பேரிச்சைபழம், பாதாம், பிஸ்தா என 30 வகையான பொருட்களுடன், 7 வகையான மதுபானங்கள் சேர்த்து கலவை உருவாக்கப்பட்டது. இதனை மரக்குடுவையில் மூடி வைத்து, 30 நாள்களுக்கு இருட்டறையில் வைக்கப்படும். இதனை அவ்வப்போது எடுத்து மீண்டும் கிளறி வைத்து விட்டு, 30 நாள்களுக்கு பின்னர் இந்த கலவையுடன் மைதா, முட்டை, நெய், தேன் சேர்த்து கிறிஸ்துமஸ் கேக் தயாரிக்க உள்ளனர். கிறிஸ்துமஸ் கேக் கலவை தயாரிக்கும் நிகழ்ச்சியில் சமையல் கலைஞர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளும் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.