புயலை எதிர்கொள்ள கடலூர் மாவட்டத்தில் துணை ஆட்சியர் தலமையில் 16 குழுக்கள் அமைப்பு

புயலை எதிர்கொள்ள கடலூர் மாவட்டத்தில் அனைத்து விதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்க்கொள்ளப்பட்டுள்ளது மேலும் ஆழ்கடலுக்கு சென்ற மீனவர்கள் கரைக்கு திரும்பி விட்டனர். 5000-திற்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கரையில் நிறுத்தப்பட்டுள்ளது

இயற்கை சீற்றங்களால் அடிக்கடி பாதிப்புக்குள்ளாகும் கடலூர் மாவட்டத்தை நோக்கி தற்போது உருவாகியுள்ள கஜ புயல் வந்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில் மாவட்ட நிர்வாகம் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நிலையில் தமிழகத்தின் கடலோர காவல் குழுமமும் தற்போது மீட்பு பணிகளில் ஈடுபட தயாராகி வருகிறது.

அதன் ஒரு பகுதியாக கடலூர், விழுப்புரம் மாவட்டத்தில் பேரிடரில் சிக்குபவர்களை மீட்பதற்காக இரண்டு குழுக்கள் தயார்படுத்தப்பட்டுள்ளது. குழுக்களில் கடலோர காவல் குழுமம் மற்றும் ஊர்க்காவல் படையினரும் இணைந்து செயல்படுவார்கள். கடலூர் மாவட்டத்தில் துணை ஆட்சியர் தலமையில் 16 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.

இவர்களிடம் மணலில் செல்லும் பைக், கயிறுகள், மிதவைகள், மிதக்கும் டின்கள் மற்றும் தொலை தூரத்தில் பார்க்கப்படும் லைட்கள் வழங்கப்பட்டுள்ளன. இவர்கள் தற்போது மீனவர்கள் கடலுக்கு செல்கிறார்களா என்பதை கண்காணித்து வருகின்றனர் மேலும் கடலில் உள்ள மீனவர்கள் உடனடியாக திரும்பவும் எச்சரிக்கை செய்து வருகின்றனர்.

மேலும் கடலூர் துறைமுகத்தில் தொடர்ந்து இரண்டாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டு உள்ளது.மேலும் கஜ புயல் கடலூர் மாவட்டத்தில் தாக்கும் பட்சத்தில் மீனவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Exit mobile version