பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் டெல்லியில் இன்று மாலை நடைபெற உள்ளது.
17 வது மக்களவைத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியமைத்துள்ளது. இதையடுத்து கடந்த மே மாதம் 30 ஆம் தேதி நடைபெற்ற பதவியேற்பு விழாவில் பிரதமர் மற்றும் மத்திய அமைச்சர்கள் பதவியேற்றுக் கொண்டனர். இந்நிலையில் மத்திய அமைச்சரவையின் கூட்டம் இன்று மாலை டெல்லியில் நடைபெறுகிறது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில் கேபினட் அமைச்சர்கள், இணை அமைச்சர்கள் பங்கேற்க உள்ளனர். 17 ஆம் தேதி நாடாளுமன்ற கூட்டத் தொடர் துவங்க உள்ள நிலையில், புதிதாக தாக்கல் செய்யவுள்ள மசோதாக்கள் மற்றும் மத்திய பட்ஜெட்டில் இடம் பெற வேண்டிய அம்சங்கள் குறித்து இந்தக் கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட உள்ளது. அடுத்த 5 ஆண்டுகள் மத்திய அரசின் செயல்பாடுகள் குறித்தும் விவாதிக்கப்படும் எனத் தெரிகிறது.