தூத்துக்குடியில் 40 ஆயிரம் கோடி ரூபாய் செலவில், எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க தமிழக அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
2020ஆம் ஆண்டின் முதல் தமிழக அமைச்சரவை கூட்டம், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்றது. துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் பங்கேற்றனர். தூத்துக்குடியில் 40 ஆயிரம் கோடி ரூபாய் செலவில், எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க அல்கெராபி என்ற நிறுவனத்திற்கு அனுமதி வழங்கி தமிழக அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதேபோல், சீன நாட்டின் வின்டெக் எனும் மின்சார வாகனம் தயாரிக்கும் நிறுவனத்தை ஸ்ரீபெரும்புதூரில் அமைக்கவும் தமிழக அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.