பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை நிர்ணயிப்பதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. ஆடிப்பட்டம் மற்றும் புரட்டாசி பருவ காலக்கட்டங்களில் விளையும் பயிர்களுக்கான மத்திய அமைச்சரவை ஒப்புதல் கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்றது. இதில் பல்வேறு வகையான பயிர்களுக்கான குறைந்தபட்ச விலைகளுக்கான ஒப்புதல்கள் வழங்கப்பட்டது. அதன்படி, நெல் ஒரு குவிண்டால் 65 ரூபாய்க்கும் சோளம் 120 ரூபாய்க்கும், ராகி 253 ரூபாய்க்கும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
அதே போல் உளுந்து 75 ரூபாய்க்கும், துவரம் பருப்பு 125 ரூபாய்க்கும், பாசிப் பயிறு 100 ரூபாய்க்கும், கடலைபருப்பு 200 ரூபாய்க்கும் விலை நிர்ணயிக்கபட்டது. பருத்தி வகைகளில் குறுகிய கால பருத்திக்கு 105 ரூபாய்க்கும் நீண்ட கால பருத்திக்கு 100 ரூபாய்க்கும் விலை நிர்ணயிக்கப்பட்டன.