நாடு முழுவதும் 10,000 வேளாண் உற்பத்தி ஊக்குவிப்பு அமைப்புகளை உருவாக்க மத்திய அமைச்சரவை, ஒப்புதல் அளித்துள்ளது.
பிரதமர் மோடி தலைமையில், மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், அடுத்த 5 ஆண்டுகளில் நாடு முழுவதும் 10 ஆயிரம் வேளாண் உற்பத்தி ஊக்குவிப்பு அமைப்புகளை உருவாக்குவதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதற்காக 6 ஆயிரத்து 865 கோடி ரூபாய் நிதி ஒதுக்கவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. பயிர்க் காப்பீட்டுத் திட்டங்களை செயல்படுத்துவதில் தற்போது உள்ள சவால்களை எதிர்கொள்ள பிரதான் மந்திரி ஃபசல் பீமா யோஜனா திட்டத்தை வானிலை அடிப்படையிலான பயிர்க் காப்பீட்டு திட்டமாக மறுசீரமைக்கவும் ஒப்புதல் அளித்துள்ளது. பால் பதனிடும் மற்றும் கட்டமைப்பு மேம்பாட்டிற்கான நிதி திட்டத்தின் கீழ் வழங்கப்படும் மானியத்தை 2 சதவீதத்தில் இருந்து, 2.5 சதவீதமாக உயர்த்தியும் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.