கஜா புயல் காரணமாக விழுப்புரத்தில் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைளும் எடுக்கப்பட்டுள்ளன – சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம்

கஜா புயல் காரணமாக விழுப்புரம் மாவட்டத்திற்கு எந்த பாதிப்பு இல்லை என்றாலும் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் கூறியுள்ளார்.

கஜா புயல் மற்றும் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்வது குறித்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆலோசனைக் கூட்டம் விழுப்புரம் ஆட்சியர் வளாகத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் கலந்து கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், விழுப்புரம் மாவட்டத்தில், மின்சாரத்துறை, காவல்துறை உள்ளிட்ட அனைத்து துறைகளும் தயார் நிலையில் உள்ளதாகவும், மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்லவில்லை என்றும் கூறினார்.

கஜா புயலினால் விழுப்புரம் மாவட்டத்திற்கு எந்த பாதிப்பு இல்லையென்றாலும், அரசு அலட்சியமாக இல்லாமல், மாவட்ட நிர்வாகம் மூலம் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்துள்ளதாக அமைச்சர் சி.வி.சண்முகம்
தெரிவித்தார்.

 

 

Exit mobile version