7 பேர் விடுதலை விவகாரத்தில் மத்திய அரசு காலம் தாழ்த்தி வருகிறது – தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம்

7 பேர் விடுதலை விவகாரத்தில் மத்திய அரசு காலம் தாழ்த்தி வருவதாக, சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் குற்றம் சாட்டியுள்ளார்.
இடைத்தேர்தல் தொடர்பாக அதிமுக சார்பில் நியமிக்கப்பட்ட பொறுப்பாளர்களின் ஆலோசனைக் கூட்டம், காஞ்சிபுரம் மாவட்டம் திருப்போரூரில் நடைபெற்றது.

சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் டி.கே.எம் சின்னையா, பா.வளர்மதி, காஞ்சிபுரம் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் சிட்லபாக்கம் ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் பேசிய அமைச்சர் சி.வி.சண்முகம், 20 தொகுதிகளில் நடைபெறும் இடைத்தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் அதிமுக அமோக வெற்றி பெறும் என தெரிவித்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சி.வி.சண்முகம், ராஜிவ் கொலை வழக்கில் 7 பேரின் விடுதலையில் தமிழக அரசு தொடர்ந்து முயற்சித்து வருவதாகவும், ஆனால் மத்திய அரசு மவுனம் காத்து வருவதாகவும் தெரிவித்தார்.

Exit mobile version