சி.ஆர். சரஸ்வதிக்கு அரசு தலைமை வழக்கறிஞர் நோட்டீஸ்

நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர அனுமதி கோரிய மனுவுக்கு பதிலளிக்குபடி சி.ஆர். சரஸ்வதிக்கு அரசு தலைமை வழக்கறிஞர் உத்தரவிட்டுள்ளார்

தனியார் தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சியில் பங்கேற்ற தினகரன் ஆதரவாளர் சி.ஆர். சரஸ்வதி, நீதிமன்றம் குறித்து அவதூறாக விமர்சித்தார். இதையடுத்து அவருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர அனுமதி கோரி அதிமுகவைச் சேர்ந்த வழக்கறிஞர் தட்சிணாமூர்த்தி, அரசு தலைமை வழக்கறிஞரிடம் மனு அளித்தார்.இதனை விசாரத்த அரசின் தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண, மனு குறித்து ஜூன் 18ம் தேதிக்குள் பதிலளிக்குமாறு சி.ஆர். சரஸ்வதிக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்

Exit mobile version