விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: அதிமுக வேட்பாளரை ஆதரித்து இன்று துணை முதலமைச்சர்வாக்கு சேகரிப்பு

இடைத்தேர்தல் நடைபெறும் விக்கிரவாண்டி தொகுதிகளில் அதிமுக வேட்பாளரை ஆதரித்து துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இன்று வாக்கு சேரிக்கிறார்.

விக்கிரவாண்டி தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் முத்தமிழ்ச்செல்வனை ஆதரித்து துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இன்று பிரசாரம் மேற்கொள்கிறார். காணை ஒன்றியத்துக்குட்பட்ட இடங்களில் அதிமுக வேட்பாளரை ஆதரித்து துணை முதல்வர் பிரசாரம் செய்கிறார். இதைத்தொடர்ந்து வரும் 18ம் தேதியும் விக்கிரவாண்டி தொகுதியில் சுற்றுப் பயணம் செய்து அவர் வாக்கு சேகரிக்கிறார்.

நாங்குநேரி தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் ரெட்டியார்பட்டி நாராயணனை ஆதரித்து நாளை மற்றும் வரும் 16, 17 ஆகிய தேதிகளில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சுற்றுப் பயணம் செய்து பிரசாரம் மேற்கொள்கிறார்.

 

 

Exit mobile version