ஆளில்லா விமானம் மூலம் காவிரிப்படுகை பாசனப் பகுதிகளில் ஆய்வு

ஆளில்லா விமானம் மூலம் பொதுப்பணித்துறை சார்பில் காவிரிப்படுகையில் உள்ள ஆற்றுப்பாசனப் பகுதிகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

மழை, வெள்ளம் ஆகியவற்றால் அதிகம் பாதிக்கும் பகுதியாக நாகை மாவட்டம் விளங்குகின்றது. அதிக மழைபொழியும் காலங்களில் ஆறுகளில் தண்ணீர் அதிக அளவு சென்று, பல இடங்களில் உடைப்பு ஏற்படுகின்றது. இதனால், விளைநிலங்கள், குடியிருப்புகள் நீரில் மூழ்கி, பொதுமக்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகின்றது. இதனை தடுக்க காவிரி வடிநிலப்பகுதியில், பல்வேறு இடங்களின் மேல்பரப்பில், ஆளில்லா விமானம் மூலம் இன்று ஆய்வுப்பணி நடைபெற்றது. நாளையும் இந்த பணிகள் தொடரும் என்றும், இது குறித்து ஆய்வு முடிவுகள் மூலம  பாதிக்கக்கூடிய பகுதிகள் கண்டறியப்பட்டு, பணிகள் மேற்கொள்ளப்படும் என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Exit mobile version