விலையில்லா ஆடுகள் திட்டத்தால் வாழ்வாதாரம் உயர்ந்துள்ளதாக பயனாளிகள் மகிழ்ச்சி

நெல்லை மாவட்டம் கடையநல்லூர் அருகே, தமிழக அரசின் விலையில்லா ஆடுகள் வழங்கும் திட்டத்தால் வாழ்வாதாரம் உயர்ந்துள்ளதாக பயனாளிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

கடையநல்லூரை அடுத்துள்ள அருணாச்சலபுரத்தில் விலையில்லா ஆடுகளால் ஏராளமானோர் பலன் அடைந்துள்ளனர். ஆடுகளை நன்றாக பராமரித்து வருவதாகவும், அதன் மூலம் நல்ல வருமானம் கிடைப்பதாகவும் அவர்கள் மகிழ்ச்சி தெரிவிக்கின்றனர். ரூபாய் ஒரு லட்சத்து 35 ஆயிரம் செலவில் ஆட்டு கொட்டகைகள் அமைந்து கொடுத்த தமிழக அரசுக்கும், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கும் பயனாளிகள் நன்றி தெரிவித்துள்ளனர்.

Exit mobile version