கடல் சீற்றத்தால் 4 வது நாளாக மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை

கடலூர் மாவட்டத்தில் கடல் கொந்தளிப்புடன் காணப்படுவதால், 4 வது நாளாக மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.

கடந்த சில தினங்களாக கடலோர மாவட்டங்களில் பலத்த காற்று வீசி வருகிறது. மேலும் அலைகளின் வேகம் அதிகரித்து, கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. இதனால், பரங்கிப்பேட்டை அண்ணங்கோயில் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து மீனவர்கள், கடலுக்கு மீன்பிடிக்க செல்லாததால் 100க்கும் மேற்பட்ட படகுகள் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதே போல் சின்னூர், சி.புதுப்பேட்டை, புதுக்குப்பம் உள்ளிட்ட பல்வேறு மீனவ கிராமங்களைச் சேர்ந்த மீனவர்களும் மீன் பிடிக்கச் செல்லவில்லை.

Exit mobile version