குடிமராமத்து பணிகளின் கீழ் நாமக்கலில் உள்ள திருமணி முத்தாறு உள்ளிட்ட நீர்நிலைகள் நிரம்பி வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்ததால், தமிழகத்தில் உள்ள அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது. மேலும், முதலமைச்சரின் குடிமராமத்து பணிகள் மூலம் நாமக்கல் மாவட்டத்தின் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள நீர்நிலைகள் தூர்வாரப்பட்டு வருகிறது. இதனால் மழை நீர் சேமிக்கப்பட்டு நிலத்தடி நீர்மட்டமும் உயர்ந்துள்ளது. இந்த நிலையில் கடந்த சில தினங்களாக பெய்த மழையால் திருமணி முத்தாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் பரமத்தியில் உள்ள இடும்பன் குளமும் நிரம்பி வருகிறது. இந்த குளத்தின் மூலம் 500க்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவிலான நிலங்கள் பாசன வசதி பெறும். இதனால் நிலத்தடி நீர்மட்டமும் உயருவதால் விவசாயிகளும், பொதுமக்களும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.