மண்சரிவு காரணமாக நிறுத்தப்பட்ட உதகை மலை ரயில் சேவை மூன்று நாட்களுக்கு பிறகு மீண்டும் துவக்கப்பட்டது.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து உதகைக்கு தினசரி மலை ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இதில் உள்ளூர் மட்டுமின்றி வெளிநாட்டு வாழ் சுற்றுலாப் பயணிகளும், பயணம் செய்து இயற்கையின் அழகை கண்டு ரசிப்பர். இந்தநிலையில்,வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்ததால், மலை ரயில் பாதையில் பல்வேறு பகுதிகளில் மண் சரிவு ஏற்பட்டதால், மலை ரயில் சேவை நிறுத்தப்பட்டது. இதையடுத்து, சேதமடைந்த ரயில் பாதை சீரமைக்கபட்டு, மூன்று நாட்களுக்கு பிறகு மீண்டும் ரயில் சேவை துவங்கியதை அடுத்து, சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சியுடன் ரயிலில் பயணித்தனர்.