நீதிமன்ற உத்தரவையடுத்து ஆவணங்களை ஒப்படைத்தார் பொன்.மாணிக்கவேல்

சிலைக் கடத்தல் வழக்கு தொடர்பான அனைத்து ஆவணங்களையும் சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு ஏடிஜிபி அபய்குமார் சிங்கிடம், பொன்.மாணிக்கவேல் ஒப்படைத்தார்.

சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவு சிறப்பு அதிகாரியாக இருந்த பொன்.மாணிக்கவேல் பதவி நீட்டிப்பு முடிவடைந்ததைத் தொடர்ந்து அனைத்து ஆவணங்களையும் தமிழக அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது.

இதனையடுத்துப் பொன்.மாணிக்கவேல் விசாரணை செய்து வந்த சிலைக் கடத்தல் வழக்குகள் தொடர்பான அனைத்து ஆவணங்களையும் சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு ஏடிஜிபி அபய்குமார் சிங்கிடம் ஒப்படைத்துள்ளார்.

இந்த நிலையில் பொன்.மாணிக்கவேல், முறையாக அனைத்து ஆவணங்களையும் ஒப்படைத்துள்ளாரா அல்லது வழக்கின் ஆவணங்கள் ஏதாவது விடுபட்டுள்ளதா என்பது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Exit mobile version