கடலூர் மாவட்டம், குமாரக்குடி கிராமத்தில் குளம் போல் தேங்கியிருந்த மழைநீரை விரைந்து அகற்ற நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கு பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.
தொடர் மழையால், கடலூர் மாவட்டம், குமாரக்குடி கிராமத்தில் மழைநீர் குளம் போல் தேங்கி தூர்நாற்றம் வீசி வந்துள்ளது. இது குறித்து அதிகாரிகளுக்கு பொதுமக்கள் தகவல் அளித்தனர். இதையடுத்து விரைந்து செயல்பட்ட அதிகாரிகள், தேங்கியிருந்த மழைநீரை உடனடியாக அகற்றினர். பின்னர் மழை நீர் மீண்டும் தேங்காதவாறு ஜேசிபி இயந்திரம் மூலம் மணல் நிரப்பினர். மக்களின் கோரிக்கையை ஏற்று உடனடியாக நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கு குமாரக்குடி கிராம மக்கள் நன்றியும், பாராட்டும் தெரிவித்தனர்.