2030 -ம் ஆண்டுக்குள் மீண்டும் பழைய நிலையில் ஓசோன் படலம் -ஐநா சபை

2030 க்குள் ஓசோன் படலம் மீண்டும் பழைய நிலைக்கு வந்து விடும் என ஐநா சபை தெரிவித்துள்ளது.

சூரியனிலிருந்து வரும் புறஊதாக் கதிர்கள் ஏற்படுத்தும் DNA குறைபாடுகள் மற்றும் புற்றுநோய் போன்ற மோசமான பாதிப்புகளில் இருந்து பூமியில் வாழும் உயிரினங்களை ஓசோன் படலம் பாதுகாத்து வருகிறது.ஆனால் இந்த ஓசோன் படலத்தில் ஓட்டை விழுந்துள்ளதை கண்டுபிடித்த விஞ்ஞானிகள், ஓட்டைக்கு காரணமான அதிகப்படியான கார்பன் வெளியேற்றத்தை தடுக்க வேண்டும் என குரல் கொடுத்தனர்.

அதிகப்படியான கார்பன் வெளியேற்றம் உள்ளிட்ட காரணிகளால், ஓசோன் படலத்தில் பாதிப்பு ஏற்பட்டு, குளோபல் வார்மிங் எனப்படும் புவி வளிமண்டல வெப்பம் அதிகரித்தது. இதைக்கட்டுப்படுத்த உறுதிபூண்ட உலக நாடுகள், கார்பன் வெளியேற்றத்தை கட்டுப்படுத்தும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர்.

இந்தநிலையில் இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ள ஐநா சபை, மரம் வளர்ப்பு உள்ளிட்ட விழிப்புணர்வு நடவடிக்கைகளால், ஓசோன் படல பாதிப்பு சரியாகி வருவதாக கூறியிருக்கிறது. 2030-ம் ஆண்டுக்குள் மீண்டும் பழைய நிலைக்கே ஓசோன் படலம் வந்து விடும் எனவும் ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.

 

Exit mobile version