தமிழகத்தை 2025 ஆம் ஆண்டிற்குள் காச நோய் இல்லாத மாநிலமாக உருவாக்க முயற்சி மேற்கொள்ளப்படும் என சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் மக்கள் நலவாழ்வு துறை பல்வேறு முன்னோடி திட்டங்களை செய்து வருகிறது. அந்த வகையில் தற்போது தமிழகத்தை காச நோய் இல்லாத, மாநிலமாக உருவாக்க சட்டமன்ற உறுப்பினர் வளாகத்தில் சிறப்பு முகாம் நடத்தப்பட்டது.
இதனை சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர் துவக்கி வைத்தார். இதில் அதிமுக, திமுக உள்ளிட்ட அனைத்து கட்சி எம்.எல்.ஏக்களும் கையெழுத்து விழிப்புணர்வில் பங்கேற்றனர். பின்னர் விழாவில் பேசிய அமைச்சர், 2025 ஆம் ஆண்டிற்குள் தமிழகத்தை காசநோய் இல்லாத மாநிலமாக உருவாக்க அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்தார்.