2022ம் ஆண்டிற்குள் விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பாகும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
பட்ஜெட்டில் விவசாயத்திற்காக 2.83 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் விவசாய கடன் இலக்கு15 லட்சம் கோடி ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. வேளாண் துறையில் முன்னேற்றத்தை ஏற்படுத்த 16 கட்டங்களாக திட்டம் இயற்றி செயல்படுத்தப்படும் என தெரிவித்த நிதியமைச்சர் 20 லட்சம் விவசாயிகளுக்கு சோலார் மின் சக்தி பம்புகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அறிவித்தார்.
2022-க்குள் விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பாகும் என்றும் 2025க்குள் பால் உற்பத்தியை இரட்டிப்பாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. விரைவில் கெட்டு போகும் பால், பழங்கள், காய்கறிகளைக் கொண்டு செல்ல குளிர்சாதன வசதியுடன் கூடிய சிறப்பு ரயில் மற்றும் விமானம் அறிமுகம் செய்யப்படவுள்ளது. வேளாண் உற்பத்தி பொருட்களுக்கு புவிசார் குறியீடு பெற்றுத் தர நடவடிக்கை எடுக்கப்படும் என குறிப்பிட்ட நிர்மலா சீதாராமன் வறட்சி பாதித்த 100 மாவட்டங்கள் மீது தனிக்கவனம் என்றும் கிராமப்புற பெண்களின் முன்னேற்றத்திற்கான தான்ய லட்சுமி திட்டம் கொண்டுவரப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
கால்நடைக்களுக்கான கோமாரி நோய் 2025 ஆம் ஆண்டிற்குள் முற்றிலும் ஒழிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது