2022ம் ஆண்டுக்குள் அனைவருக்கும் வீடு என்பதே இலக்கு- பிரதமர் மோடி

2022ஆம் ஆண்டுக்குள் அனைவருக்கும் வீடுகள் கட்டிக் கொடுப்பதே தனது இலக்கு என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

17வது மக்களவையின் மூன்றாம் கட்ட வாக்குப்பதிவுக்கான தேர்தல் பிரசாரம் இன்று மாலையுடன் நிறைவு பெறுகிறது. இந்தநிலையில் குஜராத் மாநிலம் படான் நகரில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, விங் கமாண்டர் அபிநந்தன் மீது ஒரு கீறல் விழுந்தாலும் பாகிஸ்தானை சும்மாவிடமாட்டோம் என எச்சரித்ததாக கூறினார். தேர்தல் சமயம் என்பதால் பாகிஸ்தானில் இந்திய விமானப்படை நிகழ்த்திய தாக்குதலுக்கு ஆதாரம் கேட்டு காங்கிரஸ் அழுததாக கூறிய பிரதமர் நரேந்திர மோடி, ஆனால் அக்கட்சியின் செயல் மக்களின் விமர்சனத்திற்குள்ளானதால் தற்போது அதுபற்றி காங்கிரஸ் பேசுவதில்லை என்றார். 2022ஆம் ஆண்டுக்குள் அனைவருக்கும் வீடுகள் கட்டி கொடுப்பதே தனது இலக்கு என அவர் தெரிவித்தார்.

Exit mobile version