திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் விவசாயிகள் பட்டன் ரோஸ் விவசாயத்தில் அதிக லாபம் கிடைப்பதால் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
3 வருட பயிரான பட்டன் ரோஸ் வளருவதற்கு குறைந்த அளவு தண்ணீர், உரம், போதுமானது. ஒரு நாளைக்கு 15 கிலோ முதல் 25 கிலோ வரை அறுவடை செய்யப்படுகிறது என்று தெரிவிக்கும் விவசாயிகள் ஒரு கிலோ 100 ரூபாய் முதல் 150 ரூபாய் வரை விற்பனையாவதாகவும் குறிப்பிட்டனர். மேலும் செலவினங்கள் போக மாதம் 20 ஆயிரம் முதல் 30 ஆயிரம் முதல் லாபம் கிடைப்பதாக விவசாயிகள் தெரிவித்தனர். தமிழ்நாடு தோட்டக்கலைத் துறையின் வழிகாட்டுதல் படி பயிரிடுவதால் தண்ணீர் தேவை குறைந்துள்ளதுடன் அதிக லாபம் கிடைப்பதாகவும் விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர்