கோவை மாவட்ட மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் இனப்பெருக்க காலத்தை முன்னிட்டு பட்டாம்பூச்சிகளின் வலசை போதல் என்னும் இடப்பெயர்வு தொடங்கியுள்ளது.
நிகழாண்டில் எதிர்பார்த்தபடி பருவமழை துவங்கியுள்ளதால் கோவை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தொடர்மழை பெய்து வருகிறது. இதனால் கோவை மாவட்ட மேற்கு தொடர்ச்சி மலையிலிருந்து பட்டாம்பூச்சிகள் சுற்றியுள்ள கிராமங்களுக்கு இடம்பெயரத் துவங்கியுள்ளன. 40க்கும் மேற்பட்ட வகையைச் சேர்ந்த பட்டாம்பூச்சிகள் இனப்பெருக்கத்திற்காக இடம்பெயரத் துவங்கியுள்ளன. இந்த நிகழ்வு வலசைபோதல் என அழைக்கப்படுகிறது. வண்ண வண்ணப் பட்டாம்பூச்சிகள் கூட்டம் கூட்டமாக இடம்பெயருவது காண்போரை வெகுவாக கவர்ந்துள்ளது.