பட்லர் அவுட் விவகாரம்: அஷ்வினுக்கு வலுக்கும் எதிர்ப்பு

ராஜஸ்தான் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் அணியின் கேப்டன் அஸ்வின், ராஜஸ்தான் வீரர் பட்லரின் விக்கெட்டை வீழ்த்திய விதம் அனைவரையும் வெறுப்படைய செய்துள்ளது. ஜெய்பூரில் நேற்று நடந்த ஆட்டத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி 184 ரன்களை எடுத்தது. 185 ரன்கள் இலக்கு என்ற கணக்கில் இறங்கிய, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பேட்டிங்கின் போது ஜோஸ் பட்லர் 69 ரன்களுக்கு விக்கெட்டை பறிகொடுத்தார்.

ஆட்டத்தின் 12வது ஓவரை அஸ்வின் வீசினார். பட்லர் non strikers end-ல் நின்று கொண்டு இருந்தார். அப்போது பந்து வீச ஓடி வந்த அஸ்வின் பட்லர் எல்லை கோட்டை தாண்டுவதை கண்டு பந்தை வீசாமல் run not (mankading out) செய்து அவுட் ஆக்கினார். விதிமுறைப்படி இந்த விக்கெட் ஏற்புடையது என்றாலும் ஒரு நல்ல கிரிக்கெட் வீரர் இப்படியான விக்கெட்டை எடுக்க விரும்ப மாட்டார் என கிரிக்கெட் விமர்சகர்களும், ரசிகர்களும் சமூக வளைதளங்களில் கருத்துகளை பதிவு செய்து வருகின்றனர்.

பட்லரின் விக்கெட்டை வீழ்த்தியதால் கிங்ஸ் லெவன் பஞ்சாப் வெற்றி பெற்றது. ஆட்டத்தின் முக்கிய திருப்பமாக இது கருதப்படுகிறது.

 

Sam Billings (England Wicketkeeper Batsman)

Dale Steyn (South Africa Bowler)

Mitchell McClenaghan (NewZealand Bowler)

Eoin Morgan (England ODI & T20 Skipper)

Micheal Vaughan (Former England Captain)

Jason Roy (England Batsman)

Akash Chopra (Former Indian Batsman)

Mohammad Kaif (Former Indian Batsman)

Exit mobile version