தொழிலதிபர் வீட்டில் நகை திருட்டில் ஈடுபட்ட டிரைவர் உட்பட 6 பேரை ராமநாதபுரம் போலீசார் கைது செய்துள்ளனர்.
இராமநாதபுரம் மாவட்டம், பெரியபட்டினத்தைச் சேர்ந்தவர் சிங்கம் பஷீர். தொழிலதிபரான இவர், வியாபார விஷயமாக அடிக்கடி வெளிநாடுகளுக்கு சென்று வருவார். பஷீர் வெளிநாடுகளுக்கு செல்லும்போது, வீட்டை, கார் ஓட்டுநரின் பாதுகாப்பில் விட்டு செல்வார். இந்த நிலையில் கடந்த வாரம் வெளிநாடு சென்று விட்டு ஊர் திரும்பிய பஷீர், வீட்டில் வைத்திருந்த 31 சவரன் நகை மற்றும் வீட்டில் இருந்த எலக்ட்ரானிக் பொருட்கள் திருடு போயிருப்பதை அறிந்து, காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின்பேரில் காவல்துறையினர் நடத்திய விசாரணையில், சிங்கம் பஷீரின் கார் ஓட்டுநர் மற்றும் அவரது நண்பர்கள் 6 பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.