தொழில் அதிபர் ரன்வீர் ஷா வீட்டில் கைப்பற்றப்பட்ட கல்தூண் விவகாரம்

தொழில் அதிபர் ரன்வீர் ஷா மீது திருவாரூர் தியாகராஜர் கோவில் கல்தூண்களை கடத்திச்சென்றதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் சிலைக்கடத்தல் குறித்து ஐ.ஜி பொன்.மாணிக்கவேல் தலைமையிலான குழுவினர் விசாரணை நடத்தி வருகின்றனர். அதன் அடிப்படையில் சென்னை சைதாப்பேட்டையை சேர்ந்த தொழில் அதிபர் ரன்வீர் ஷா வீட்டில் இருந்து பதுக்கி வைக்கப்பட்டிருந்த சிலைகள்,
கல்தூண்கள் உள்பட ஏராளமான பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

இந்த நிலையில் திருவாரூரில் செய்தியாளர்களை சந்தித்த சிலை தடுப்பு பிரிவு ஐ.ஜி.பொன் மானிக்கவேல்,தமிழகம் முழுவதும் சிலைகளை ஆய்வு செய்யும் பணி தொடர்ந்து நடந்து வருவதாக குறிப்பிட்டார்.இதுவரையிலும் ஆயிரத்து 500 க்கும் மேற்பட்ட சிலைகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர், வெளிநாடுகளில் இருந்து 150 கோடி ரூபாய் மதிப்புள்ள சிலைகள் மீட்கப்பட்டுள்ளதாக கூறினார்.

தொழில் அதிபர் ரன்வீர் ஷா மீது திருவாரூரில் தியாகராஜர் கோவிலில் கல்தூண்களை கடத்தி சென்றதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் பொன்.மாணிக்கவேல் தெரிவித்தார்.

Exit mobile version