அம்பத்தூர் எஸ்டேட்டில் தொழில் அதிபரை வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பி ஓடிய வடமாநில தொழிலாளர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
சென்னை வியாசர்பாடி பெரியார்நகர் திருவள்ளுவர் தெருவைச் சேர்ந்தவர் ஆனந்தன். இவருடைய மகன் பிரபாகரன் வயது 27. இவருக்கு திருமணமாகி நந்தினி என்ற மனைவியும், 4 மாத கைக்குழந்தையும் உள்ளது. பிரபாகரன் அம்பத்தூர் எஸ்டேட்டில் உள்ள அத்திப்பட்டு பகுதியில் இரும்பு பைப்புகளுக்கு துரு அகற்றும் கம்பெனி ஒன்றை நடத்தி வந்தார்.இவருடைய கம்பெனியில் இருந்த வேலையாட்கள் விடுமுறைக்காக சொந்த ஊருக்கு சென்ற நிலையில். பீகாரை சேர்ந்த 2 வாலிபர்கள் கடந்த 5 நாட்களுக்கு முன் வேலைக்கு சேர்ந்தனர். நேற்று முன்தினம் காலை பிரபாகரன் கம்பெனியில் பணிகளை கவனித்து கொண்டிருந்தார். தந்தை ஆனந்தன் பிரபாகரனுக்கு தொலைபேசியில் தொடர்பு கொள்ள முயற்சி செய்தார் இருப்பினும் பிரபாகரன் போனை எடுக்கவில்லை. இதனால் சந்தேகமடைந்து தந்தை இரவு கம்பெனிக்கு வந்து பார்த்தபோது மகன் பிரபாகரன் தலை, முகத்தில் அரிவாளால் வெட்டியும், இரும்பு பைப்பால் அடித்தும் கொலை செய்யப்பட்டு இறந்து கிடந்தார். தகவலறிந்து அம்பத்தூர் துணை கமிஷனர் ஈஸ்வரன் தலைமையிலான காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்த்தபோது பிரபாகரன் பாக்கெட்டில் இருந்த விலை உயர்ந்த செல்போன் மற்றும் கம்பெனியில் இருந்த பணம், பர்சில் இருந்த பணம் கொள்ளை போய் இருந்தது.
காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர் முதற்கட்ட விசாரணையில்,பிரபாகரன் கம்பெனியில் வேலை செய்துவந்த வடமாநில தொழிலாளர்கள் 2 பேரும் மாயமாகி இருந்தனர். அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தபோது, 2 வாலிபர்கள் பையுடன் தப்பி ஓடுவது போன்ற காட்சிகள் பதிவாகி இருந்தது எனவே பணத்திற்க்காக இந்த 2 வடமாநில இளைஞசர்கள் தான் பிரபாகரனை கொலை செய்திருக்கவேண்டும் என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் வடமாநில இளைஞர்கள் ரெயில் மூலம் சொந்த ஊருக்கு தப்பிச்சென்றார்களா? என ரெயில் நிலையங்களில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளையும் காவல்துறையினர் ஆராய்ந்து வருகின்றனர்.