ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுகவிற்கு வணிகர் சங்கங்கள் ஆதரவு !

ஈரோடு காந்தி நகர் பகுதியில், இளம் வணிகர்கள் நலச்சங்கம், ஜவுளி வியாபாரிகள், மற்றும் பல்வேறு வணிக சங்கங்ககளை சேர்ந்தவர்களை சந்தித்து, தேர்தல் பணிக்குழு தலைவரும் முன்னாள் அமைச்சருமான கே.ஏ.செங்கோட்டையன், அதிமுக வேட்பாளர் கே.எஸ்.தென்னரசுவிற்கு ஆதரவு கோரினார். முன்னாள் அமைச்சர்களும் தேர்தல் பொறுப்பாளர்களுமான தங்கமணி, கே.வி.ராமலிங்கம், மற்றும் ஈரோடு கிழக்கு தொகுதி அதிமுக வேட்பாளர் கே.எஸ்.தென்னரசு மற்றும் பகுதி கழக செயலாளர் மனோகரன், ஜெகதீசன் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகளும் ஆதரவு கோரினர். அப்போது தமிழ்மாநில காங்கிரஸ் கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் உடன் இருந்தனர். இதைதொடர்ந்து வணிகர் சங்கங்கள் அதிமுகவிற்கு ஆதரவு தெரிவித்தன.

Exit mobile version