இரவு நேர ஊரடங்கு அமலாகி உள்ள நிலையில், கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றி சென்னை கோயம்பேட்டில் இருந்து அரசு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
இரவு நேர ஊரடங்கு காரணமாக, அதிகாலை 4 மணி முதல் இரவு 10 வரை மட்டுமே அரசு பேருந்துகள் இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட நேரத்தில் போதிய அளவு பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. முகக் கவசம் அணிந்து வரும் பயணிகள் மட்டுமே பேருந்து நிலையத்திற்குள் அனுமதிக்கப்படுகின்றனர். ஒவ்வொரு பயணிக்கும் உடல் வெப்பநிலை பரிசோதிக்கப்படுவதுடன், பேருந்தில் ஏறுவதற்கு முன் கைகளை சுத்தம் செய்வதற்கான கிருமிநாசினி வழங்கப்படுகிறது. அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகளுக்கு வரவேற்றுள்ள பயணிகள், எந்தவித அச்சமும் இன்றி அரசு பேருந்துகளில் பயணிக்க முடிவதாக தெரிவித்தனர்.