ஜூன் 28ம் தேதி முதல் 27 மாவட்டங்களில் 9 ஆயிரத்து 333 பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துத்துறை தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் கூடுதல் தளர்வுகளுடன் ஜூலை 5ம் தேதிவரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய 4 மாவட்டங்களில் ஏற்கெனவே பேருந்துகள் இயக்கப்படும் நிலையில்,
தற்போது வகை 2ல் உள்ள அரியலூர், கடலூர், தருமபுரி உள்ளிட்ட 23 மாவட்டங்களில் பேருந்துகள் இயக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதையடுத்து வரும் 28ம் தேதி காலை 6 மணி முதல் 27 மாவட்டங்களில் பேருந்துகள் இயங்கவுள்ளன.
முதற்கட்டமாக 9 ஆயிரத்து 333 பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாகவும், பயணிகளின் வருகைக்கேற்ப கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும் என்றும் போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.
பேருந்துகளை கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்து, உரிய வழிமுறைகளைப் பின்பற்றி இயக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
பொதுமக்கள் முகக்கவசம் அணிந்து, பாதுகாப்பான இடைவெளியை பின்பற்றி பயணம் செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.