3 மாத நிலுவை ஊதிய தொகை வழங்காத புதுவை அரசை கண்டித்து பேருந்து ஓட்டுநர்கள் 2-வது நாளாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
புதுச்சேரியில் நிலுவையில் உள்ள 3 மாத ஊதியத்தை உடனடியாக வழங்கக்கோரி ஆயிரத்திற்கும் மேற்பட்ட புதுச்சேரி அரசு பேருந்து ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்கள் 2-வது நாளாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதில், கடந்த ஆண்டு அறிவித்த போனஸ் தொகையை வழங்க வேண்டும் என வலியுறுத்தி பேருந்துகளை இயக்காமல் பனிமனையில் நிறுத்தி தங்களின் எதிர்ப்பை தெரிவித்து வருவகின்றனர். மாநிலம் முழுவதும் 135 பேருந்துகள் இயங்காததால் பள்ளிக்கு செல்லும் மாணவர்களும், வேலைக்கு செல்பவர்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.