மகாராஷ்டிராவில் பேருந்து மற்றும் ரயில் சேவைகள் நிறுத்தப்பட மாட்டாது என்று அம்மாநில முதலமைச்சர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.
மும்பையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 50 சதவீத ஊழியர்களை கொண்டே அரசு அலுவலகங்கள் இயக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார். மகாராஷ்டிராவில் இதுவரை 40 பேருக்கு கொரோனா பாதிப்பு உள்ளதாகவும், அவர்களில் ஒருவரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது என்றும் அவர் தெரிவித்தார். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, பேருந்து மற்றும் ரயில் சேவை இயக்கம் நிறுத்தப்பட மாட்டாது என்று கூறிய அவர், மக்கள் அடுத்த 20 நாட்களுக்கு தேவையற்ற பயணங்களை தவிர்க்கவும் வலியுறுத்தினார்.அரசின் அறிவுரையை ஏற்காமல், மக்கள் தேவையற்ற பயணங்களை மேற்கொண்டால் போக்குவரத்து மற்றும் ரயில் சேவை நிறுத்துவது குறித்து பரிசீலக்கப்படும் எனவும் உத்தவ் தாக்கரே தெரிவித்தார்.