கோவை மாநகராட்சி குப்பை கிடங்கில் பற்றி எரியும் குப்பைகள்

கோவை வெள்ளலூர் மாநகராட்சி குப்பை கிடங்கில் கடந்த 3 நாட்களாக எரிந்து வரும் தீயை அணைக்க விமானப்படை ஹெலிகாப்டர்கள் வரவழைக்கப்பட்டுள்ளது. கோவை மாநகராட்சியில் பல நூறு ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள குப்பை கிடங்கில் பல ஆயிரம் டன் குப்பைகள் கொட்டப்பட்டிருந்த நிலையில் கிடங்கில் திடீரென தீப்பிடித்தது. இதனை தொடர்ந்து குப்பை கிடங்கு முழுவதும் பரவிய தீ விடிய விடிய கொழுந்துவிட்டு எரிந்தது.

தகவலறிந்து வந்த தீயணைப்பு துறையினர் 200 க்கும் மேற்பட்டோர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில் தீயால் அருகிலுருக்கும் குடியிருப்பு பகுதிகளில் புகை சூழ்வதால் உடனடி நடவடிக்கையாக சூலூர் விமான படைக்கு சொந்தமான 2
ஹெலிகாப்டரில் தண்ணீர் கொண்டு வரப்பட்டு குப்பை கிடங்கில் எரியும் தீ மீது ஊற்றப்பட்டு வருகிறது.

இரண்டு நாட்களாக போராடி தீயை அணைக்க முடியாததால் ஹெலிகாப்டர்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Exit mobile version