செங்கோட்டை அருகே பற்றி எரிந்த காட்டு தீ

நெல்லை மாவட்டம் செங்கோட்டை அருகே பற்றி எரிந்த காட்டு தீயில் ஏராளமான மரங்கள் எரிந்த சாம்பலாயின. நெல்லை அருகே தமிழக – கேரள எல்லையை ஒட்டி மேக்கரை அடவி நயினார் நீர்த்தேக்கம் உள்ளது. அதன் அருகே உள்ள மலை பகுதியில் திடீரென காட்டுத்தீ பற்றியுள்ளது. கடும் வெயில் காரணமாக காய்ந்து கிடந்த நிலப்பரப்பில் தீ மளமளவென பற்றி எரிய தொடங்கியுள்ளது.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புப் படையினர் நீண்ட நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். அந்த தீ விபத்தில், ஏராளமான மரங்கள் மற்றும் மூலிகை செடிகள் எரிந்து சாம்பலாயின.

Exit mobile version