அடக்கம் செய்யப்பட்டவர் மீண்டு வந்த அதிசயம்

பீகார் மாநிலத்தில் அடக்கம் செய்யப்பட்டதாகக் கருதப்பட்டவர் மீண்டும் உயிரோடு வந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பீகார் மாநிலத்தைச் சேர்ந்த 49 வயதான சஞ்சீவ் குமார் மனநோயால் பாதிக்கப்பட்டு இருந்தார், கடந்த மாதம் 26ஆம் தேதி திடீரெனக் காணாமல் போன அவர் பின்னர் வீடு திரும்பவே இல்லை. அதனால் அவருடைய உறவினர்கள் பக்கத்தில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். பின்பு ஒருநாள் சஞ்சீவ் குமாரின் வீடு அருகில் உள்ள ஆற்றில் அடையாளம் தெரியாத நபரின் உடல் ஒன்று காவல்துறைக்குக் கிடைத்தது. அதனைப் பார்த்த அவரது உறவினர்கள் ‘அது சஞ்சீவ் குமாரின் உடல்தான்’ என்று உறுதியும் செய்து, அந்த உடலை வாங்கி அடக்கமும் செய்தனர்.

பின்னர் சில நாட்கள் கழித்து சமீபத்தில் சஞ்சீவ் குமார் உயிரோடு மீண்டும் தனது வீட்டிற்கு வந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் விசாரித்த போதுதான் அடக்கம் செய்யப்பட்டது இன்னொரு நபரின் உடல் என்பது தெரிய வந்தது. இப்படியாக பீகாரில் அடக்கம் செய்யபட்டவர் திரும்ப வந்த செய்தி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Exit mobile version