5 நாள் போராட்டத்திற்கு பிறகு மீட்கப்பட்ட குழந்தை சுஜித்தின் உடல், பொது மக்கள் அஞ்சலிக்கு பிற அடக்கம் செய்யப்பட்டது.
ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த சுஜித்தின் உடல் மீட்கப்பட்டு, உடற்கூறு ஆய்வுக்காக, மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. பின்னர், அமைச்சர் விஜயபாஸ்கர், வெல்லமண்டி நடராஜன் மற்றும் வளர்மதி ஆகியோர் சிறுவனின் உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.
இதைத் தொடர்ந்து, கல்லறைக்கு எடுத்துச் செல்லப்பட்ட சுஜித்தின் உடல் பொது மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. ஏராளாமான பொதுமக்கள் கண்ணீர் மல்க சிறுவனுக்கு அஞ்சலி செலுத்திய நிலையில், குழந்தையின் இழப்பை தாங்க முடியாமல் சுஜித்தின் தாய் கதறி அழுதார். பின்னர் சுஜித்தின் உடல் கிறிஸ்துவ முறைப்படி சடங்குகள் செய்யப்பட்டு, பாத்திமாபுதூர் கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டது.
இதனிடையே, சுஜித்தின் உயிரை பலிவாங்கிய ஆழ்துளை கிணறும், குழந்தையை மீட்பதற்காக போடப்பட்ட குழியும் சிமெண்ட் கான்கிரீட் கலவையால் மூடப்பட்டன.