பாலக்கோடு அருகே உள்ள கரகூர் சந்தை தோப்பு கிராமத்தில் நடைபெற்ற எருதுகட்டு போட்டியில் 200க்கும் மேற்பட்ட காளைகள் கலந்து கொண்டு சீறிப்பாய்ந்தன.
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே உள்ள கரகூர் சந்தை தோப்பு கிராமத்தில் நடைபெற்ற எருதுகட்டு போட்டியில், பஞ்சப்பள்ளி, மாரண்டஅள்ளி, இராயக்கோட்டை உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதியில் இருந்து 200க்கும் மேற்பட்ட காளைகள் கலந்து கொண்டன.
முன்னதாக கிராம மக்கள் மேள தாளங்களுடன் பாரம்பரிய கோ பூஜை செய்து முடித்தப் பின் முதன் முதலாக ஊர் கவுண்டரின் காளை அவிழ்த்து விடப்பட்டது. அதனைத் தொடர்ந்து ஒன்றன் பின் ஒன்றாக 200 க்கும் மேற்பட்ட காளைகள் அவிழ்த்து விடப்பட்டன.
சீறி பாய்ந்து வரும் காளைகளை அடக்குவதற்காக ஏராளமான இளைஞர் போட்டி போட்டு விரட்டி சென்றனர். இந்த மஞ்சு விரட்டைக் சுற்றுப்பகுதிகளில் இருந்து வந்திருந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஆர்வத்துடன் கண்டு களித்தனர். இதில், சிறப்பாக மாடுகளை பிடித்த இளைஞர்களுக்கும், பிடிபடாமல் ஓடிய காளைகளின் உரிமையாளர்களுக்கும் பரிசுகள் பரிசுகள் வழங்கப்பட்டது.