கோயில் குடமுழுக்கு விழாவையொட்டி மாட்டுவண்டி போட்டி

சிவகங்கையில் நடைபெற்ற மாட்டுவண்டி போட்டியில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு அமைச்சர் பாஸ்கரன் பரிசுகளை வழங்கினார்.

சிவகங்கை மாவட்டம், வீழனேரியில் உள்ள மெய்ய அய்யனார் கோயிலில் கும்பாபிஷேக திருவிழாவையொட்டி மாட்டுவண்டி பந்தயம் நடைபெற்றது. சிவகங்கை மற்றும் மதுரை மாவட்டத்தின் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து 33 மாடுகள் பங்கேற்றன. இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கதர் மற்றும் கிராம தொழில்துறை அமைச்சர் பாஸ்கரன், சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில்நாதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு வெற்றி பெற்ற வெற்றிபெற்ற மாடுகளுக்கும் அதன் சாரதிகளுக்கும் பரிசுகளை வழங்கினர்.

Exit mobile version