”BULLET” எல்லாம் வேஸ்ட்…! ”XL” தான் மாஸ்…! இணையத்தை கலக்கும் மொரட்டு ரைடர்…!!

பாண்டிச்சேரியில் XL மீது நின்று கொண்டு EXCELLENT PERFORMENCE செய்து இணையத்தில் ட்ரெண்ட் ஆகியுள்ளார் சீனியர் சிட்டிசன் ஒருவர்… யார் அவர் பார்க்கலாம்.

ராக்கி பாய்களுக்கே ரவுசு காட்டும் இந்த 62 வயது மொரட்டு ரைடரின் பெயர் ஜான் ரிச்சடு. பாண்டிசேரி வாழ், பவர் கிடங்கு.

கேடிஎம், டியோ போன்ற சிசியில் சிகரம் தொட்ட பைக்குகளை வைத்துக் கொண்டே ரேஸ் விட புள்ளிங்கோஸ் தலைகீழாக நின்று பெட்ரோல் குடித்து கொண்டிருக்கையில், 12 வருட பழைய xl ல்லை வைத்து கொண்டு பாண்டியையே தெறிக்க விட்டு கொண்டிருக்கிறார் இந்த பைக் மாஸ்டர்.

ரைடுகளின் நடுவே தட்டுத்தடுமாறி சீட்டின் மீது ஏறி சிறுது நேரம் STANDING MODE-ல் சென்று வித்தை காட்டிவது ரேசர்களின் வழக்கம். ஆனால் எக்ஸ் எல் மீது ஏறி நின்றது மட்டுமல்லாது இடுப்பில் கை வைத்த படி டிராபிக் கிளியர் செய்து பிபி எகிற வைக்கிறது இந்த வயதான சிங்கம்.

ஆள் நடமாட்டமே இல்லாத பாண்டிச்சேரி, மெரினாவில் மட்டுமல்ல. போக்குவரத்து நிறைந்த சாலையில் பொறி பறக்க காற்றை கிழித்து செல்கிறது தாத்தாவின் எக்ஸ் எல்.

வயசானாலும் அழகும், ஸ்டைலும் மாறாத இந்த பாண்டிச்சேரி படையப்பாவை பார்த்து ரம்யா கிருஷ்ணனை போல வியந்து போய் கிடக்கிறார்கள் பாண்டிச்சேரி மைந்தர்கள்.

Exit mobile version