அரியலூர் அருகே நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டியில், 500-க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன.
கள்ளூர் கிராமத்தில் நடைபெற்ற இந்த ஜல்லிக்கட்டில், காளைகள் வாடிவாசல் வழியாக சீறிப்பாய்ந்தன. இந்நிகழ்வில் திருச்சி, லால்குடி, புதுக்கோட்டை, மணப்பாறை, தஞ்சாவூர், பேராவூரணி உள்ளிட்ட பல பகுதிகளைச் சேர்ந்த காளைகளை, அதன் உரிமையாளர்கள் அழைத்து வந்திருந்தனர். மருத்துவ பரிசோதனை செய்யப்பட்ட பின்னர், 200-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் காளைகளை அடக்கி தங்களது வீரத்தை நிரூபித்தனர். காளைகளை பிடித்த மாடுபிடி வீரர்களுக்கும், பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும், சைக்கிள், ஃபேன், கட்டில், மிக்ஸி உள்ளிட்ட பரிசுகள் வழங்கப்பட்டன. இந்த ஜல்லிக்கட்டுப்போட்டியை நூற்றுக்கணக்கான இளைஞர்களும், பெண்களும் ஆர்வமுடன் கண்டு ரசித்தனர்.