துக்கோட்டை அருகே நடைபெற்ற மஞ்சுவிரட்டுப்போட்டியை, 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் கண்டு ரசித்தனர்.
புதுக்கோட்டை மாவட்டம் புதுநிலைப்பட்டியில், ஸ்ரீகண்ணுடைய அய்யனார் கோயிலின் புரவி எடுப்புத் திருவிழா நடைபெற்று வருகிறது. இதையொட்டி, அவ்வூரின் கண்மாயில் நடைபெற்ற மஞ்சுவிரட்டுப் போட்டியில், 200-க்கும் மேற்பட்ட காளைகள் கட்டவிழ்த்து விடப்பட்டன. நூற்றுக்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் பங்கேற்று, மாடுகளைப் பிடித்து பரிசுகளை வென்றனர். பிடிபடாத காளைகளுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. இதில் சிவகங்கை, மணப்பாறை சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த ஏராளமான குழந்தைகள், பெண்கள், பெரியவர்கள் என பலரும் ஆர்வமுடன் வந்து, மஞ்சுவிரட்டை கண்டு ரசித்தனர்.