திருவண்ணாமலை அருகே நடைபெற்ற காளை விடும் விழாவை ஏராளமான பொதுமக்கள் கண்டு ரசித்தனர்.
செங்கத்தை அடுத்த கொட்டாவூர் கிராமத்தில் காளை விடும் விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில், 150க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன. வெற்றி பெற்ற காளை மாடுகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இந்த விழாவை ஏராளமான பொதுமக்கள் கண்டு ரசித்தனர்.