ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் அடுக்குமாடி கட்டட பணிகள் தீவிரம்

ஈரோட்டில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் 17 கோடி ரூபாய் மதிப்பில் 197 வீடுகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் நீர் நிலை பகுதிகளில் வசித்து வரும் மக்களுக்கு புதிய அடுக்குமாடி குடியிருப்பு கட்டி கொடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதையடுத்து தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தின் சார்பில், ஈரோடு மாநகராட்சிக்குட்பட்ட மோளகவுண்டன்பாளையத்தில் மத்திய அரசின் அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ், 17 கோடியே 28 லட்சம் ரூபாய் மதிப்பில் 192 வீடுகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு கட்டும் பணிகள் கடந்த ஆண்டு துவங்கப்பட்டது. இதற்கான கட்டுமான பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இரவு, பகலாக தொழிலாளர்கள் கட்டுமான பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இன்னும் 6 மாதம் காலத்திற்குள் பணிகளை முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Exit mobile version